தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய ஆங்கில ஆசிரியர் கைது

திருச்சி அருகில் இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள பள்ளியில் மாணவிகளிடம் தொடர்ந்து தவறாக நடந்துவரும் ஆங்கிலப் பாட ஆசிரியர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

By

Published : Feb 18, 2022, 2:42 PM IST

Pocso act:பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய ஆங்கில பாட ஆசிரியர் கைது
Pocso act:பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய ஆங்கில பாட ஆசிரியர் கைது

திருச்சி:இனாம்குளத்தூர் பகுதியில் ஹாஜியார் முகமது யூசுப் மேல்நிலைப்பள்ளி 30 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் பயின்றுவருகின்றனர்.

தொடர்ந்து தொல்லையில் ஈடுபடும் ஆசிரியர்

இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கிலப் பாட ஆசிரியர் முருகேசன் கடந்த பல நாள்களாகவே 12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கடந்த 20 நாள்களுக்கு முன்பு பள்ளி தலைமை ஆசிரியர் ஆங்கிலப் பாட ஆசிரியர் முருகேசனை பத்து நாள்கள் பள்ளிக்கு வரக்கூடாது எனப் பணியிடை நீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் பணிக்குச் சேர்ந்த இவர் மீண்டும் இன்று மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததால் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் கூறிய தகவல் அடிப்படையில் இனாம்குளத்தூர் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி ஆசிரியரைக் கைதுசெய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்சோ சட்டத்தில் கைதாக வாய்ப்பு

தகவலறிந்த இனாம்குளத்தூர் காவல் துறையினர், பள்ளியில் ஆசிரியரிடம் விசாரணை செய்துவந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் பள்ளி ஆசிரியர் முருகேசன், சக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், மாணவி, பெற்றோரிடம் விசாரணை செய்தார். இதனைத் தொடர்ந்து முருகேசனை கைதுசெய்து ஜியபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆங்கிலப் பாட ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டார். மேலும் ஆசிரியர் முருகேசன், பள்ளி மாணவிகளிடம் விசாரணை செய்து உண்மை என்று தெரியவரும்பட்சத்தில் ஆங்கிலப் பாட ஆசிரியர் முருகேசன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நெல்லையில் அதிமுக வேட்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details