திருச்சிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள டீக்கடையில் நேற்றிரவு (டிச.24) பாஜக வழக்கறிஞர் சரவணன் மற்றும் சிறுபான்மை அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமுவேல் லவ் ஜாய் ஆகிய இருவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பானது. இதில் பாஜகவைச் சேர்ந்த இருவரும் மற்றொரு நபரை தாக்கினர். பதிலுக்கு அந்த நபரும் இருவரையும் தாக்கினார்.
பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய அந்த நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே ஓடியபோது பின்னால் துரத்தி வந்த பாஜகவினர் அந்த நபரை சரமாரியாக தாக்கினர். அங்கிருந்து தப்பி ஓடி வந்த நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைந்தார்.
இதில் பாஜக சிறுபான்மை அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமுவேல் லவ்ஜாய் காயமடைந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் உடனடியாக அவசர ஊர்தி மூலம் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.