தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்கள் கைது..!

நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதலில் ஒராண்டுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட விவகாரத்தில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

By

Published : Nov 17, 2022, 12:41 PM IST

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த 16 வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமை வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், சம்பந்தபட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியாகி உள்ளன.

முசிறி அடுத்த அந்தரபட்டியை சேர்ந்த ரெங்கநாதன் என்பவர், அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி இரு சக்கர வாகனத்தில் தைலமரகாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து சிறுமி மயக்கமடைய வைத்து தன் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் சிறுமியை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, கூப்பிடும் நேரத்தில் வரவில்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி, 3 முறைக்கு மேல் நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது

சிறுமியின் நடத்தையில் மாற்றத்தை கண்டறிந்த பெற்றோர் அவளுக்கு, வேறொரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். குழந்தை திருமணம் குறித்து தகவல் அறிந்த சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்தனர். மேலும் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சிறுமி காப்பகத்தில் இருந்து படித்து வந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் சிறுமியின் வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் வேகமாக பரவிய வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காப்பகத்தில் இருந்த சிறுமியை அழைத்து விசாரித்த போலீசார் உண்மையை கண்டறிந்தனர்.

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிந்த போலீசார், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அந்தரபட்டியை சேர்ந்த ரெங்கநாதன், சிறுகாம்பூரைச் சேர்ந்த மணி என்ற மணிகண்டன், தர்மா என்கிற கணேஷ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள்... - பைடன் ஷாக்..!

ABOUT THE AUTHOR

...view details