தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்திய 10 அடி நீளமுள்ள முதலை - 3 மணி நேரமாக பிடிக்க போராடிய வனத்துறை! - trichy latest news

திருச்சி: ஆற்றில் பல நாள்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 10 அடி நீளமுள்ள முதலையை வனத்துறையினர் போராடி பிடித்தனர்.

crocodile
crocodile

By

Published : Feb 29, 2020, 8:48 PM IST

திருச்சி உய்யகொண்டான் திருமலை கல்லாங்காடு பகுதியில் குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. இதன் அருகில் உள்ள ஆற்றில் முதலை ஒன்று, அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது

இது தொடர்பாக, அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் முதலையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பொதுமக்களை அச்சுறுத்திய 10 அடி நீளமுள்ள முதலை

இருப்பினும், சுமார் மூன்று மணி நேரமாக முதலை பிடிபடாமல் போக்கு காட்டியது. பிறகு ஒருவழியாக முதலை வனத்துறையினர் பிடியில் சிக்கியது. இதைத்தொடர்ந்து, கல்லணை அருகே உள்ள காவிரி ஆற்றுப்பகுதியில் முதலையை கொண்டுசென்று பாதுகாப்பாக விட்டனர். இவ்வகை முதலை நன்னீர் வகையைச் சேர்ந்தது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:'பூனைகளை வேட்டையாடிய 5 பேர்' கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details