தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து சாதனை! - successfully underwent endoscopy

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சிறுநீர் அடைப்பை எண்டோஸ்கோப்பி மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 27, 2023, 10:32 PM IST

Updated : May 28, 2023, 6:04 PM IST

பிறந்து 10 நாட்களே ஆன குழந்தைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து சாதனை

திருச்சி: பிறந்து பத்து நாட்களே ஆன மிகவும் எடை (1.25 கிலோ) குறைவாக இருந்த பச்சிளம் குழந்தைக்கு சிறுநீர் அடைப்பு இருந்தது தெரியவந்தது. இந்த சிறுநீர் அடைப்பை எண்டோஸ்கோபிக் லேஸர் ஃபுல்ரேஷன் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அப்போலோ சிறப்பு மருத்துவர்கள் குழு செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் சிறுநீரகவியல் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் அழகப்பன் சொக்கலிங்கம் கூறுகையில், "கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு இருபதாம் வாரம் எடுக்க கூடிய அநாமலிஸ்கேன் எனப்படும் குறைபாடுகள் கண்டறியும் பரிசோதனையில் குழந்தைக்கு இரண்டு சிறுநீரகம் மிகவும் வீக்கமா இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இது மிகவும் அபாயகரமான நிலை என பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த சிக்கலால் குழந்தை இறப்பதற்கான வாய்ப்பு இருப்பது பெற்றோருக்கு உணர்த்தப்பட்டது. இதை அடுத்து புதுகை மருத்துவமனையிலிருந்து திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதையும் படிங்க:உதயநிதி அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம்..அமலாக்கத்துறை அதிரடி

இது போன்ற பிறந்து 10 நாட்கள் ஆன, எடை குறைவாக உள்ள இந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது மிகுந்த சவாலான ஒரு விஷயமாக இருந்தது. இதற்கு மிகுந்த மருத்துவ நுண்ணறிவு, உலகத்தர உபகரணங்கள், தேர்ந்த மயக்க மருந்து நிபுணர், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்கள், மருத்துவர் அழகப்பன் சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் மூலமாக வெற்றிகரமாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த குழந்தை தற்பொழுது மருத்துவமனை கவனிப்பில் இருந்து வீடு திரும்பிய நிலையில் வெளி நோயாளியாக மருத்துவமனைக்கு வந்த குழந்தை தற்பொழுது மிகுந்த ஆரோக்கியத்துடன் உள்ளது. மேலும் 1.2‌ கிலோகிராம் இருந்த குழந்தை தற்போது 6‌ கிலோ கூடிய எடையுடன் உள்ளது.

இந்த குழந்தை சாதாரண குழந்தைகளைப் போல் சிறுநீர் வெளியேற்றவும் இவருக்கு இருந்த வீக்கம் குறைந்தும் சிறுநீரகங்கள் திறன்பட இயங்குகிறது” என அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அரிக்கொம்பனுக்கு வனத்துறையின் ஸ்கெட்ச் - 10 பேரை கொன்றவன் என்பதால் உஷார்

Last Updated : May 28, 2023, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details