திருச்சி:நெடுமலை கிராமத்தை சேர்ந்த சதீஸ் குமார் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் திருச்சியை சேர்ந்த பாலா பாரதி, போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் மாணிக்க ராஜ், வரலாற்று ஆசிரியர் கருப்பையா, தாயனூர் பழனியாண்டி, கொத்தமங்கலம் சத்யசீலன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
செக்கானது 76 சென்டிமீட்டர் வெளிவிட்டமும், 48 சென்டிமீட்டர் உள்விட்டமும் , 13 சென்டிமீட்டர் விட்டத்தை கொண்ட துளையுடன் காணப்படுகிறது. ஒரு அடி ஆழத்தில் உட்புறம் பானை போன்ற குழியுடன் எண்ணெய் ஆட்டுவதற்கான அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. செக்கில் மூன்று வரிகளுடன் கூடிய எழுத்துகளை கல்வெட்டாக பதித்துள்ளனர்.