தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வையம்பட்டி அருகே 95 லிட்டர் பழச்சாறு பறிமுதல்: 2 பேர் கைது - திருச்சி மாவட்டச் செய்திகள்

திருச்சி: வையம்பட்டி அருகே 95 லிட்டர் பழச்சாறு பறிமுதல்செய்யப்பட்டு இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

வையம்பட்டி அருகே 95 லிட்டர் பழச்சாறு பறிமுதல்
வையம்பட்டி அருகே 95 லிட்டர் பழச்சாறு பறிமுதல்

By

Published : Jun 10, 2021, 1:53 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.ஏ. மூர்த்தி உத்தரவின்படி மாவட்ட பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் மாவட்ட தனிப்பிரிவு தனிப்படை காவலர்கள் மணப்பாறை காவல் உட்கோட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்து தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் பகுதியில் முத்துகவுண்டர் மகன் வேலுச்சாமியிடமிருந்து (48) 20 லிட்டர் பழச்சாறும், ஆணையூர் பகுதியில் கருப்பன் மகன் சதீஸிடமிருந்து (27) 30 லிட்டர் பழச்சாறும், ஆண்டியப்பன் மகன் பால்ராஜிடமிருந்து (35) 45 லிட்டர் பழச்சாறையும் பறிமுதல்செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தனிப்பிரிவு காவலர்களின் அறிக்கையின்படி வழக்குப் பதிவு செய்து வையம்பட்டி காவல் துறையினர் வேலுச்சாமி, சதீஸ் ஆகிய இருவரை கைதுசெய்த நிலையில் தலைமறைவாகியுள்ள பால்ராஜை தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details