திருச்சி :ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ரூ.93 லட்சம் உண்டியல் காணிக்கை! - உண்டியல் காணிக்கை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை அறநிலையத்துறை ஊழியர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது.

அதன்படி கடந்த மாதம் 20ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்கள் அனைத்தும் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் அறநிலையத்துறை ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் திருக்கோவிலில் உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் இன்று எண்ணப்பட்டது.
இதில் பக்தர்கள் 93லட்சத்து 22ஆயிரத்து 577ரூபாய் ரொக்கம், 143 கிராம் தங்கம், 2431 கிராம் வெள்ளி, 85 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்பட்டன என ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :பழனி உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது தங்கநகைகளைத் திருடிய பெண் ஊழியர் கைது!