தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு ... 9 பேர் கைது - trichy

தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக நிர்வாகிகள் 9 பேர் கைது செய்யப்பட்னர்.

மு.க.ஸ்டாலினை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பாஜக உறுப்பினர் உட்பட 9 பேர் சிறையில் அடைப்பு
மு.க.ஸ்டாலினை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பாஜக உறுப்பினர் உட்பட 9 பேர் சிறையில் அடைப்பு

By

Published : Dec 2, 2022, 2:33 PM IST

திருச்சி: புத்தூர் நால் ரோட்டில் புதிதாக உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் மதுபான கேளிக்கை நடனத்திற்கு அனுமதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும், ஆபாச வார்த்தைகளால் வசைப்பாடினர்.

அப்போது அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

மு.க.ஸ்டாலினை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பாஜக உறுப்பினர் உட்பட 9 பேர் சிறையில் அடைப்பு

இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆபாசமாக பேசிய பாஜக கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இதனை வலியுறுத்தி அரசு மருத்துவமனை எதிரில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில், பாஜக உறுப்பினர் லெட்சுமி நாராயணன், பாஜக திருச்சி மாவட்டத் தலைவர் ராஜசேகரன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம், உள்ளிட்ட 9 பேர் மீது கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுதல், ஆபாச வார்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் உறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படடுள்ளது.

இதையும் படிங்க: திருச்சியில் ரூ.1 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details