தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலை வாங்கித் தருவதாக ஏமற்றிய நபரை கடத்த முயன்றவர்கள் கைது..! - திருச்சியில் வேலை வாங்கி தருவதாக ஏமற்றிய நபரை கடுத்த முயன்றவர்கள் கைது

திருச்சி: வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த இந்து அமைப்பின் முன்னாள் நிர்வாகியை, பாதிக்கப்பட்டவர் தன் நண்பர்களோடு கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 பேர் கைது

By

Published : Sep 28, 2019, 11:02 PM IST

Updated : Sep 29, 2019, 8:51 AM IST

தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் அகில பாரத இந்து மகாசபா அமைப்பின் முன்னாள் மாநில செயலாளர் ஆவார். இந்நிலையில் திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் நின்று கொண்டிருந்த இளையராஜாவை காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் கடத்தி சென்றது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காந்தி மார்கெட் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் காரை விரட்டிச் சென்ற காவல்துறையினர் திருவானைக்காவல் பகுதியில் வைத்து காரை மடிக்கி பிடித்து இளையராஜாவை மீட்டனர்.

பின்னர் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்தனர். இதில் பெரம்பலூர் மாவட்டம், கீழ்புதூரைச் சேர்ந்த செந்தில்குமார் தனது நண்பர்களான பொன்னர், ஆரிப், துரைராஜ், நிவாஸ் உள்ளிட்ட எட்டு பேருடன் சேர்ந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அரசு வேலை வாங்கித் தருவதாக இளைராஜா ரூ. 5 லட்சம் மோசடி செய்திருப்பதும், பண்தை திருப்பி கொடுக்காததால் நண்பர்களுடன் சேர்த்து கடத்தியதும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: சினிமா வாழ்வில் நான் திருப்தியடையவில்லை - ரேகா!

Last Updated : Sep 29, 2019, 8:51 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details