திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவிவரும் நிலையில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எட்டாயிரத்து 914ஆக அதிகரித்துள்ளது.
திருச்சியில் புதிதாக 74 பேருக்கு கரோனா - திருச்சி மாவட்ட கரோனா எண்ணிக்கை
திருச்சி : கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று (செப்.14) புதிதாக 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
74 new corona cases in trichy
திருச்சி மாவட்டத்தில் இன்று (செப்.14) ஒரே நாளில் 107 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதுவரை ஏழாயிரத்து 929 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை மாவட்டத்தில் 131 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது திருச்சி மாவட்டத்தில் 854 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.