கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு, நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், தடையை மீறி பொது இடங்களில் ஒன்று திரண்டு, சீட்டு விளையாடுவது, பட்டம் விடுவது, கிரிக்கெட் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் துறையினர் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் வளநாடு அருகே சோலையம்மாபட்டியைச் சேர்ந்த சரவணன்,பொன்னர்,செல்வகுமார்,ரஞ்சித்குமார்,லோகநாதன்,சூர்யா ஆகிய ஆறு இளைஞர்களும் நேற்று முன்தினம் உடும்பு வேட்டைக்குச் சென்றுள்ளனர். அவர்கள், பிடித்த உடும்பை கும்பலாக சமைத்து சாப்பிடும் காணொலியை டிக்டாக் செயலியில் பதிவிட்டுள்ளனர்.