தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகள் இயக்க மாநிலச் செயலாளர் கொலை வழக்கு - சிறுவன் உள்பட 6 பேர் கைது! - விவசாயிகள் இயக்க மாநில செயலாளர்

தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநிலச் செயலாளர் கொலையில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர், உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Etv Bharat விவசாயிகள் இயக்க மாநில செயலாளர் கொலை வழக்கில் 6 பேர் கைது
Etv Bharat விவசாயிகள் இயக்க மாநில செயலாளர் கொலை வழக்கில் 6 பேர் கைது

By

Published : May 4, 2023, 5:01 PM IST

விவசாயிகள் இயக்க மாநில செயலாளர் கொலை வழக்கில் 6 பேர் கைது

திருச்சி: சிறுகனூர் அருகே எம்.ஆர். பாளையம் கிழக்கு காலனியில் வசித்து வந்தவர், 60 வயதான சண்முகசுந்தரம். இவர், தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநிலச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரண்டாவது மனைவி வளர்மதி கோபித்துக்கொண்டு, தன் அண்ணன் வீட்டுக்குச் சென்று விட்டார். இந்நிலையில், பி.கே. அகரத்தைச் சேர்ந்த இவரது அக்கா மகன் ஆனந்த் தினமும் சண்முகசுந்தரத்திற்கு மூன்று வேளையும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். கடந்த 29ஆம் தேதி இரவு ஆனந்த் சண்முகசுந்தருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த சண்முகசுந்தரம் வீட்டிற்கு கடந்த 30ஆம் தேதி அதிகாலை வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மறுநாள் காலை வழக்கம்போல் சாப்பாடு கொடுக்க வந்தபோது சண்முகசுந்தரம் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுகனூர் காவல் துறையினர் சண்முகசுந்தரத்தின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கில் கொலையாளிகளைப் பிடிப்பதற்காக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்படி லால்குடி துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையில் சிறுகனூர் சமயபுரம், லால்குடி காவல் ஆய்வாளர்கள். கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் எம்.ஆர். பாளையம் பகுதியில் உள்ள அரசு நிலம் சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், சண்முகசுந்தரத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இந்தக் கொலை சம்பந்தமாக நேற்று முன்தினம் திருச்சி கீழப்புலிவார்டு சாலையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்ல நீதிமன்றத்தில் சிறுவன் சரணடைந்தான். மேலும் இந்த கொலை வழக்கில் விசாரணை முடுக்கிவிடப்பட்டு மற்ற குற்றவாளிகளைth தேடி வந்தனர்.

காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருவதை அறிந்த சணமங்கலம் ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அறிவழகன், எம்.ஆர்.பாளையம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், கார்த்திகேயன், சண்முகவேல், இளவரசன் ஐந்துபேரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, சணமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் சரணடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து எதிரிகள் ஐந்து பேரையும் கிராம நிர்வாக அலுவலர் சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் துறையினர் விசாரணையில் பல வருடங்களாக அரசு நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்ததில் முன்விரோதம் காரணமாக சிறுவன் உட்பட ஐந்து பேரும் கூட்டுச்சதி செய்து திட்டமிட்டு, சண்முகத்தை கொடூர முறையில் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் குற்றவாளிகள் கொலைக்குப் பயன்படுத்திய அரிவாள், பிச்சுவாகத்தி, இரண்டு மோட்டார் பைக் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து சணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரத்தின் உறவினரான ஆனந்த் கொடுத்தப்புகாரின் பேரில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சிறுகனூர் காவல் துறையினர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இதையும் படிங்க:Pollachi Murder: கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை.. கேரளாவில் இளைஞர் கைது.. திருமணம் தாண்டிய உறவு காரணமா?

ABOUT THE AUTHOR

...view details