திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஆன்லைன், தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின்பேரில் மணப்பாறை பகுதிகளில் தனிப்படை காவலர்கள் சோதனை நடத்தினர்.
மணப்பாறையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை - 5 பேர் கைது - Illegal lottery sale at Trichy
திருச்சி: மணப்பாறையில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை, தனிப்படையினர் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.
லாட்டரி
அப்போது, லாட்டரி விற்பனை செய்துகொண்டிருந்த குணசேகர் (39), டேனியல் (44), தோமஸ் (52), லூர்துசாமி (48), மரியஜோசப் (45) ஆகிய ஐந்து பேரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 6790 ரூபாய், இரண்டு இருசக்கர வாகனங்கள், ஆறு செல்போன்களைப் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது - 5 வாகனங்கள் மீட்பு!