திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், கஞ்சா, லாட்டரி விற்பனை அமோகமாக நடப்பதாக மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஹுல்ஹக் உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையிலான காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணப்பாறை நகர் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர்களை காவல் துறையினர் பிடித்தனர்.
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை - 5 பேர் கைது - காவல் துறையினருக்கு ரகசிய தகவல்
திருச்சி: மணப்பாறையில் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்த ஐந்து பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை 5 பேர் கைது
மேலும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த முருகேசன், ஜோசப் தியாகராஜன், வேளாங்கண்ணி, மனோகர், செந்தில்குமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 60 ஆயிரம் பணத்தையும், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் லாட்டரி குலுக்கல்: 14பேரை கைது செய்த தனிப்படையினர்