தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான்காவது நாளாக தொடரும் மீட்புப்பணி! - சுஜித்தை மீட்கும் பணி

திருச்சி: மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 63 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

4ஆவது நாளாக தொடரும் மீட்புப்பணி

By

Published : Oct 28, 2019, 9:07 AM IST

Updated : Oct 28, 2019, 12:23 PM IST


திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 64 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி 24மணி நேரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது.

நேற்று காலை ஏழு மணியளவில் குழி தோண்டும் பணி தொடங்கியது. இதில் பயன்படுத்தப்பட்ட முதல் ரிக் இயந்திரம் 35அடிக்கு குழி தோண்டியிருந்தது. பின்பு, பிற்பகல் 12 மணியளவில் கொண்டுவரப்பட்ட அதிதிறன் கொண்ட ‘ராக் பிரேக்கர்’ என்னும் இரண்டாவது ரிக் இயந்திரம் ஏழு மணிநேரத்தில் ஐந்தடிக்கு மட்டுமே குழி தோண்டியுள்ளது.

இரவு பகலாக மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும் கடுமையான பாறைகள் தென்படுவதால் குழி தோண்டும் பணி தாமதமடைந்தது.

மேலும், இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தற்காலிகமாக குழி தோண்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்பு, பழுது சரிசெய்யப்பட்டு குழி தோண்டும் பணி தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க :மீட்புப் பணிகளை பார்வையிட வந்த துணை முதலமைச்சர்!

Last Updated : Oct 28, 2019, 12:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details