திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட் தங்கம் பறிமுதல் திருச்சி:திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இங்கு விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
அந்த வகையில், நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தடைந்தடைந்தது. அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, இந்த தகவலின் அடிப்படையில் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 பயணிகள் தங்களது ஜீன்ஸ் பேண்ட்டில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.41 லட்சத்து 75 ஆயிரத்தது 727 மதிப்புள்ள 697 கிராம் எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பிடிபட்ட நபர்களின் பாஸ்போர்ட் , விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா, வேறு வழக்குகள் இவர்கள் மீது எதுவும் நிலுவையில் உள்ளதா, எத்தனை முறை விமானத்தில் வெளிநாடு சென்று வந்துள்ளனர் என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:Nellai - Chennai Vande Bharat Train : நாட்டில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி துவக்கி வைப்பு!