கரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால், N95 முகக் கவசங்கள், ஒரு முறை பயன்பாட்டு முகக் கவசங்கள், துணியால் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்கள் என பல வகையிலான முகக் கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றில் மறுமுறை பயன்படுத்தப்படக்கூடிய முகக் கவசங்களே மருத்துவர்களால் பெரும்பாலும் பரிந்துரை செய்யப்படுகிறது. இதன்படி, மறுமுறை பயன்படுத்தப்படக்கூடிய முகக் கவசங்கள் தயாரிக்கும் பணி துரிதமாக பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
காவலர்களுக்கு வழங்கப்பட்ட 3டி முகக் கவசங்கள் அந்த வகையில், திருச்சி என்.ஐ.டியில் முப்பரிமாண வடிவமைப்பு கொண்ட, மீண்டும் பயன்படுத்தப்படக் கூடிய, புதிய வடிவிலான முகக் கவசங்கங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக இவை, திருச்சி அரசு, சித்தா மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.
தற்போது திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சரகத்தில் பணியாற்றும் 200 காவலர்களுக்கு முப்பரிமாண முகக் கவசங்களை என்.ஐ.டி இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் திருவெறும்பூர் டி எஸ் பி சுரேஷ்குமாரிடம் வழங்கினார். இந்த 3டி முகக் கவசங்கள், திருவெறும்பூர் சரகத்தில் உள்ள 320 காவலர்களுக்கும் வழங்கப்படும் என சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:காகத்தைக் காப்பாற்றிய காவலர்கள்