திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், அபுதாபி ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்துவருகிறது.
விமானத்தில் தங்கம் கடத்தல் - திருச்சியில் 4 பேர் கைது! - custom officers seized 35 lakhs worth gold
திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், கடத்தி வரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்தவர்களை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருப்பத்தூரை சேர்ந்த அருண்பாண்டி என்பவரிடம் ரூ. 8 லட்சம் மதிப்பிலான 158 கிராம் தங்கமும், புதுக்கோட்டையைச் சேர்ந்த துரைசாமி என்பவரிடம் ரூ. 9.5 லட்சம் மதிப்பிலான 188 கிராம் தங்கமும், பெரம்பலூரை சேர்ந்த சத்யராஜ் என்பவரிடமிருந்து ரூ. 8.12 லட்சம் மதிப்பிலான 168 கிராம் தங்கத்தையும் சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணித்த நாகராஜ் என்பவரிடமிருந்து ரூ. 9.4 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு பேரிடமும் சுங்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ. 35 லட்சம் மதிப்பிலான 693 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.