முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி பிரியா வயது 31, இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரியா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்,ஜோசியர் ஒருவரிடம் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா? இல்லை பெண் குழந்தையா என கேட்டுள்ளார். அப்போது அந்த ஜோசியர் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பிரியா தனது கணவர் சிவக்குமாருக்கு தெரியாமல் தனது தாயை அழைத்துகொண்டு கருக்கலைப்பு செய்வதற்காக துறையூர் பச்சமலை அருகே செங்காட்டுபட்டி கிராமத்தில் மருந்தகம் நடத்தி வரும் சித்ரா என்பவரிடம் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இதில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் பாதிக்கப்பட்ட பிரியா, சம்பவம் தொடர்பாக தனது கணவர் சிவகுமாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக துறையூருக்கு வந்த கணவர் சிவக்குமார், மனைவி பிரியாவை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: 2 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை கைது!