திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆனாம்பட்டி குளத்தில் சிலர் அனுமதியின்றி மண் எடுப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலையடுத்து காவல் துறையினர் அங்கு சென்று சோதனைசெய்தனர்.
அப்போது அங்கு செல்ல கவுண்டம்பட்டியைச் சேர்ந்த சின்னையா மகன் கமலக்கண்ணன் (30), உசிலம்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் மணி (43), புதுகாலனியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஸ்வரன் (30) ஆகியோர் குளத்தில் மண் எடுத்த நிலையில் கையும்களவுமாகப் பிடிபட்டனர்.