திருச்சி, திருவானைக்காவல் கொண்டையன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (55). இவரது மகள் புவணா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி இரவு 8 மணியளவில் புவணா கடைக்கு சென்றார். அப்போது காரில் வந்த கும்பல் ஒன்று அவரை கடத்திச் சென்றது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் காவலர்கள் புவணாவை தேடி வந்தனர். விசாரணையில் மாணவியை கடத்தி பழனி பகுதியில் வைத்திருந்தது, செல்போன் டவர் மூலம் தெரியவந்தது. மேலும் மாணவி புவணாவுக்கு, கட்டாய திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்ததும் தெரியவந்தது.