திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளில் சிலர் தங்கத்தை கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுங்கத்துறை அதிகாரிகள் அவ்வபோது சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் 251 கிராம் தங்கம் பறிமுதல் - தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 12.84 லட்சம் மதிப்பிலான 251 கிராம் தங்கம் பறிமுதல் இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்
திருச்சி விமான நிலையத்தில் 251 கிராம் தங்கம் பறிமுதல்
அந்த வகையில், நேற்று 5:15 மணிக்கு துபாயில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமான பயணிகளிடம் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற பயணியிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் மறைத்து வைத்திருந்த ரூபாய் 12.84 லட்சம் மதிப்பிலான 251 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயன்ற நபருக்கு போலீசார் வலை