திருச்சி மாவட்டம் பைத்தம்பாறை கிராமத்தில் வசித்து வருபவர் வீரய்யா (69). இவர் முசிறி தாலுகா அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவருடைய இரு மகன்களும் வெளியூரில் வசித்துவருகின்றனர். வீரய்யா தனது மகளின் திருமணத்திற்குப் பத்திரிகை வைப்பதற்காக வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது மனைவியும் மகளும் கடைக்குக் கிளம்பியுள்ளனர்.
வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு; போலீஸ் விசாரணை! - 25 poun gold jewels theft at trichy
திருச்சி: வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரமும், 25 பவுன் நகைகளையும் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு
இதை கவனித்த மர்ம நபர்கள் வீட்டில் ஆட்கள் இல்லாததை உறுதி செய்துவிட்டு, பூட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கு பீரோவில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகையும், ரூ. 50 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து தாத்தையங்கார் பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.