திருச்சி:திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது. விமானத்தில் பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் அதிரடியாக பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது விமானத்தில் வந்த பயணி ஒருவர் தங்கத்தை பொம்மைகளில் 6 உருளை வடிவில் 216.500 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கத்தை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 12.84 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், சுங்கதுறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் எந்த நோக்கத்திற்காக விளையாட்டு பொம்மைகளில் சட்ட விரோதமாக தங்கத்தை கடத்தி வந்த்ள்ளார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது பாஸ்போர்ட் , விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா வேறு வழக்குகள் பயணியின் மீது எதுவும் நிலுவையில் உள்ளதா ? இவர் எத்தனை முறை விமானத்தில் வெளிநாடு சென்று வந்துள்ளார் என அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .