திருச்சியில் திருச்சி ஜெகன்மாதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் உலக நாணயம், பணத்தாள் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியினை பள்ளி தாளாளர் சகாயராஜ் தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியில் பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான பணத்தாள்கள், காசோலை, வரைவோலை, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, பண வடிவ மற்ற பிட்காய்ன்கள் எனப் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
சங்க காலத்தில் மன்னா்களான சேர, சோழ, பாண்டியர் தங்கள் சின்னங்களான வில், மீன், புலி முத்திரைகள் அடங்கிய நாணயங்கள், சங்க காலத்திற்கு பின் தமிழ் எழுத்துகளுடன் பல்லவர் காலத்து நாணயங்களும் இடம்பெற்றிருந்தன.