துபாயிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளைக் கடத்த முயன்ற மூன்று பேரை, வான் நுண்ணறிவு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நூதன முறையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்! - trichy
திருச்சி: ஆசனவாயிலில் மறைத்து திருச்சிக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சிக்கு வந்த பயணிகளை, வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனையிட்டனர். அப்போது, சென்னைச் சேர்ந்த இப்ராஹிம், வேலூரைச் சேர்ந்த ஆரிப், முகமது காதர் பாஷா ஆகியோர் தங்களது ஆசனவாயிலில் தங்கக் கட்டிகளை மறைந்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதனைப் பறிமுதல் செய்த நுண்ணறிவு பிரிவினர், அவர்களைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனையில், சுமார் 614 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை சுமார் 20 லட்சம் மதிப்புடையவை என்றும் நுண்ணறிவு பிரிவினர் தெரிவித்தனர்.