மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் ஒன்று வந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்! - தங்கம்
திருச்சி: விமான நிலையத்தில் டிவி ஹேங்கரில் மறைத்து கடத்திவரப்பட்ட இரண்டு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
![திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3201129-821-3201129-1557117199792.jpg)
2 கிலோ தங்கம் பறிமுதல்
அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன் (30) என்பவர் டிவி ஹேங்கர் கொண்டு வந்தார். பார்க்க வித்தியாசமாக இருந்ததால், அலுவலர்கள் அதை மீண்டும் மீண்டும் சோதனை செய்தனர்.
அப்போது, அதில் தகடு வடிவில் சுமார் இரண்டு கிலோ தங்கம் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதன் மதிப்பு ரூ. 66 லட்சத்து 25 ஆயிரம் எனவும் தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் முருகேசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.