திருச்சி:மணப்பாறை இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர், சின்னசாமி.
இவர் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரைக் காணவில்லை என மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஜனனிப்ரியா தலைமையிலான தனிப்படையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று (அக்.6) கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சின்னசாமி காரை மீட்டனர்.