தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் 190 பேருக்கு கரோனா! - திருச்சி கரோனா

திருச்சி: மாவட்டத்தில் இன்று (ஜூலை 22) புதிதாக 190 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் 190 பேருக்கு கரோனா!
திருச்சியில் 190 பேருக்கு கரோனா!

By

Published : Jul 23, 2020, 9:04 PM IST

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 472 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து இறப்பு எண்ணிக்கை 3,232 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 190 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 1,307 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 146 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேபோல் கரோனா தொற்றால் இன்று மாவட்டத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் 1,345 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details