திருச்சி மாவட்டம், மணப்பாறையில் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் (51). இவர் விராலிமலையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகளின் திருமணத்திற்காக, அடகு வைத்திருந்த நகைகளை மீட்டுக் கொண்டு வந்து, வீட்டில் வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு (ஆகஸ்ட் 13) அவரது மனைவி வீட்டில் உள்ள பீரோவைத் திறந்து உள்ளே பார்த்தபோது, 16 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை களவுபோயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர், விசாரணை மேற்கொண்டார்.