தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை28) ஒரே நாளில் 6 ஆயிரத்து 972 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,659 ஆக உள்ளது.
இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 149 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 1,313 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 63 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.