தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 8, 2020, 7:41 PM IST

ETV Bharat / state

கரோனா அப்டேட்: திருச்சியில் ஒரே நாளில் 14 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி: கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 14 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பினர்.

கரோனா
கரோனா

கரோனா தொற்றின் தாக்கம் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் திருச்சியில் இதுவரை மொத்தம் 116 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் படிப்படியாக பலர் பூரண குணமடைந்து வீடு திரும்பி வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அவர்களை திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் இணைந்து வழியனுப்பி வைத்தனர்.

தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் 26 பேர் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குறையாத கரோனா - உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதியில்லை

ABOUT THE AUTHOR

...view details