தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் ரூ.120 கோடியில் பாலம்; அமைச்சர் எ.வ.வேலு தகவல்! - 120 crore estimated for trichy bridge work

திருச்சியில் ரூபாய் 120 கோடி மதிப்பீட்டில் புதிய பாலத்திற்கான டெண்டர் இம்மாதம் விடப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் ரூ 120 கோடிக்கு பாலம்!
திருச்சியில் ரூ 120 கோடிக்கு பாலம்!

By

Published : Jul 8, 2023, 6:49 PM IST

திருச்சியில் ரூ 120 கோடிக்கு பாலம்!

திருச்சி: சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு போக்குவரத்து நலப்பணிகள் மற்றும் திருச்சி நகராட்சியில் கிடப்பில் கிடக்கும் மெட்ரோ திட்டங்கள், 3 உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணிகள், சாலை அமைப்பது மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, "திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பால் பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்ட பாலம், சர்வீஸ் சாலை இரண்டுமே அமைக்க எங்களுக்கும் ஆசை தான் ஆனால் அதற்கு அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பல்வேறு சங்கங்கள் இணைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பணிகள் தாமதமாகிறது மற்றும் திருச்சி 3 உயர் மட்ட பாலங்கள் கட்டுவதற்கு மெட்ரோ ரயில் திட்ட ஆய்வால் தாமதம்” எனக் குறிப்பிட்டார்.

உயர்மட்ட பாலம், மெட்ரோ குறித்து: திருச்சி மாநகர பகுதிகளில் 3 இடங்களில் உயர்மட்ட பாலம் பணிகள் கிடப்பில் போடப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், "மெட்ரோ மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை இதில் இணைந்து பேசி மெட்ரோவின் ஆய்விற்கு பின்னர் தான் முடிவு செய்ய முடியும். 3 உயர்மட்ட பாலங்கள் அமைக்க விரிவான திட்ட அறிக்கையை மாநில நெடுஞ்சாலை துறை தயார் செய்தது.

ஆனால், மெட்ரோ நீங்கள் பாலம் அமைத்தால் நாங்கள் எப்படி தனியாக பில்லர் அமைக்க முடியும் என்று கூறினர். இதனால் இரு அமைப்பும் கூட்டு முயற்சியில் இதனை செய்யலாம் என கூறி உள்ளனர். ஆனால் சரியாக எப்போது இந்த பணிகள் துவங்கும் என்று சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.

திருச்சி காவிரி மேம்பாலம்:திருச்சி காவிரி புதிய மேம்பால பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் அதற்கு சுமார் 120 கோடி மதிப்பீட்டில் பாலப்பணிகள் நடைபெற உள்ளன என்றும் கூறினார். மேலும், இப்பணிக்கான டெண்டர் இந்த மாதத்தில் விடப்பட்டு பணிகளை துவங்க உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். திருச்சியில் துவாக்குடி பகுதியில் இருந்து பூவாளூர், மண்ணச்சநல்லூர், ஜீயபுரம் வரை புறவழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணிக்கு திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்ட மதிப்பீடு உருவாக்கப்பட்டு விரைவில் பணி துவங்கும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:வந்தே பாரத் உள்பட அனைத்து ரயில்களில் டிக்கெட் விலை குறைப்பு... ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..

ABOUT THE AUTHOR

...view details