தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திகவினர் மீது காலணி, கல் வீச்சு...! 12 பேர் கைது - கீ வீரமணி

திருச்சி: இந்துக்களை இழிவுபடுத்தி பேசியதாக திராவிடர் கழகத்தினர் மீது காலணி, கல் வீசி தாக்குதல் நடத்திய 12 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திராவிடர் கழகத்தை சேர்ந்த 2 பேர் காயம்

By

Published : Apr 5, 2019, 11:25 AM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு திராவிடர் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் தாராநல்லூர் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். திராவிடர் கழகத்தினர் பேசும்போது, இந்துக்களுக்கு எதிராகவும், இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக தெரிகிறது.

அப்போது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் மேடையின் மீது காலணி, கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணிகார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் காவல் துறையில் புகார் அளிக்கபட்டது.

இதன்பேரில் காவல் துறையினர் இந்து மாநகர நிர்வாகியான மணிகண்டன் உள்பட 12 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்தில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்து முன்னணியர் 12 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details