தமிழ்நாடு

tamil nadu

திருச்சி விமான நிலையத்தில் 1.4 கிலோ தங்கம் பறிமுதல்!

By

Published : Dec 22, 2020, 5:20 PM IST

திருச்சி: துபாய், சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.4 கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

Trichy gold smuggling  gold smuggling  1.4 Kg Gold Seized In Trichy Airport  Gold Seized  Trichy Crime News  திருச்சி குற்றச் செய்திகள்  திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்  தங்கம் பறிமுதல்  தங்கம் கடத்தல்
1.4 Kg Gold Seized In Trichy Airport

கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்து ’வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் வரும் விமானங்களில் தங்கக் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

பயணிகளிடம் சோதனை

இந்நிலையில், துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது.

இதில், வந்த பயணிகள், அவர்களது உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர்.

தங்கம் பறிமுதல்

அப்போது, அப்துல் ரசாக் (வயது 40) என்பவரிடமிருந்து 1 கிலோ 173 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதேபோல் மற்றொரு விமானத்தில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ரவிச்சந்திரன் (வயது 34) என்பவரை சோதனையிட்டத்தில் 249 கிராம் தங்கம் சிக்கியது.

இருவரிடமிருந்தும் 1.42 கிலோ தங்கம் கைப்பற்றபட்டுள்ளது. தொடர்ந்து இருவரிடமும் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 286 கிராம் தங்கக் கடத்தல்!

ABOUT THE AUTHOR

...view details