தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுப்பிரியர்களிடம் கரோனா நிவாரணம் வசூல் செய்த இளைஞர் - தமிழ்நாடு இளைஞர் கட்சி நரேஷ்குமார்

திருப்பத்தூர்: ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மதுப்பிரியர்களிடம் இளைஞர் ஒருவர் கரோனா நிவாரணத் தொகை வசூல் செய்துள்ளார்.

மதுப்பிரியர்களிடம் நிவாரணம் வசூலித்த  வேலூர் மாவட்டச் செய்திகள்  தமிழ்நாடு இளைஞர் கட்சி நரேஷ்குமார்  vellore district news
மதுப்பிரியர்களிடம் கரோனா நிவாரணம் வசூல் செய்த இளைஞர்

By

Published : May 7, 2020, 3:22 PM IST

வேலூரைச் சேர்ந்த நரேஷ்குமார் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்டத் தலைவராகவும், மிதிவண்டி பயண சாகச வீரராகவும் இருந்து வருகிறார். இவர், ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு உதவிகளை தனது நண்பர்களுடன் இணைந்து செய்துவந்தார்.

இந்நிலையில், இன்று முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மது வாங்க வரிசையில் நின்ற நூற்றுக்கணக்கான மதுப்பிரியர்களிடம் அவர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் திரட்டினார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, " மதுபானக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றோம். ஆனால், மனுவை ஆட்சியர் வாங்கவில்லை.

அதனால், மது வாங்க வருவோர்களிடமே நிவாரணம் வசூலிக்க முடிவு செய்து காகிதபட்டறை, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நிதி வசூல் செய்து வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க:ஆர்வக்கோளாறில் பட்டாசு வெடித்த குடிமகன்கள்: அதிரடி காட்டிய போலீஸ்

ABOUT THE AUTHOR

...view details