தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை! - மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை

ராமநாதபுரம்: மனைவி தன்னைவிட்டு தாய் வீட்டுக்கு பிரிந்து சென்றதால் கணவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி பிரிந்த் சோகத்தில் தற்கொலை
தற்கொலை

By

Published : Oct 6, 2020, 7:49 PM IST

ராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (30). இவர் ஏற்கனவே திருமணமான கோவிந்தம்மாள் என்பவரை திருமணம் செய்து வாழ்க்கை நடத்திவந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.,4) ஏற்பட்ட பிரச்னை காரணமாக வீட்டிலுள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு கோவிந்தம்மாள், சத்திரக்குடி அருகே மஞ்சூர் கிராமத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த நாகராஜ், தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 90 விழுக்காடு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details