அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி ஜெயமணி (35). ஜெயமணி தனது மாட்டை விவசாய நிலத்தில் மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார். இரவு நேரமாகியும் ஜெயமணி வீட்டுக்கு திரும்பவில்லை.
மின்கம்பி அறுந்து விழுந்து பெண் உயிரிழப்பு - மின்கம்பி
அரியலூர்: மின்கம்பி அறுந்து விழுந்ததில் மாடு மேய்க்கச் சென்ற பெண் ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயமணி
இதனால் பதற்றமடைந்த பழனிச்சாமி வயலுக்குச் சென்று பார்த்தபோது வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியின் அருகே மாடு இறந்துகிடந்தது. மாட்டின் அருகே ஜெயமணியும் இறந்து கிடந்துள்ளார். மாட்டைக் காப்பாற்றச் சென்றபோது ஜெயமணி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.