விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த வைரபிரகாஷ், வேல்பாண்டி ஆகிய இளைஞர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு பகுதியில் குளித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மதுபோதையில் இருந்த இருவரும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலாகுளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த வைரபிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.