விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்! - விருதுநகர் மாவட்ட செய்திகள்
விருதுநகர்: ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Virudhnagr Nam Tamizhar party Potest
இதில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை திரும்பப் பெற வேண்டும், தேசிய மும்மொழிக் கொள்கையையும், இ-பாஸ் முறையையும் ரத்து செய்ய வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழு மூலம் நடைபெற்றுவரும் கந்து வட்டி வசூல் செய்யும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.