குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 15 நாள்கள் பயணமாகக் கடந்த நவம்பர் 17ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற தண்ணீர் பாதுகாப்பு உறுதிமொழி நாள் நிகழ்ச்சியிலும், 20 ஆம் தேதி நடைபெற்ற பள்ளிகள் மற்றும் கிராமங்கள் போன்ற அடிப்படை நிலைகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.