தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடுமலையில் வயது முதிர்ந்த தம்பதியினரை கை, கால்களை கட்டிப்போட்டு துணிகர கொள்ளை! - Thiruppur Crime News

திருப்பூர் : உடுமலைப் பேட்டையில் கணவன், மனைவியின் கை, கால்களை கட்டிப்போட்டு வீட்டில் கொள்ளையடித்த துணிகர கொள்ளையில் கும்பல் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

உடுமலையில் வயது முதிர்ந்த தம்பதியினரை கைக் கால்களை கட்டிப்போட்டு துணிகர கொள்ளை!
உடுமலையில் வயது முதிர்ந்த தம்பதியினரை கைக் கால்களை கட்டிப்போட்டு துணிகர கொள்ளை!

By

Published : Sep 5, 2020, 8:52 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை அண்ணாநகர் ராஜ் கார்டன் பகுதியில் ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் ராஜகோபால் (70) அவரது மனைவி லட்சுமி பிரபா (63) வசித்துவருகின்றனர்.

இவர்களது ஒரே மகன் அசோக் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை இவர்கள் வீட்டின் பின்புறம் வழியாக வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் முன்புற கதவை உடைத்து உள்ளே புகுந்து தூங்கிக்கொண்டிருந்த ராஜகோபால், அவரது மனைவியை கைகளைக் கயிற்றால் கட்டிப்போட்டுள்ளனர்.

மேலும், அவர்களிடமிருந்து 30 பவுன் நகைகள், 1.5 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராஜகோபாலுக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. இவர்கள் இந்தச் சம்பவத்தை யாரிடமும் தகவல் கூறிவிடாதவாறு வீட்டிலிருந்த 3 செல்போன், இரண்டு டேப்களை (tabs) எடுத்துச்சென்று வீட்டிற்கு வெளியே வீசிச் சென்றனர்.

அதன்பிறகு சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டுகளை அவிழ்த்த அந்த வயது முதிர்ந்த தம்பதியினர், அக்கம்பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்று திரும்பினார்.

இந்தத் துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திசாமிட்டல் பாதிக்கப்பட்ட ராஜகோபாலின் வீட்டிற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

மேலும், தடயவியல் வல்லுநர்கள், மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கொள்ளைச் சம்பவம் குறித்து உடுமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

உடுமலை பகுதியில் நடைபெற்றுவரும் தொடர் கொள்ளைச் சம்பவத்தால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details