தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடுபிடிகளுக்கு விவசாயிகள் விரைவில் பாடம் புகட்டுவர் - உதயநிதி ஸ்டாலின்

சென்னை : பஞ்சாயத்து ராஜ் சட்டம் கிராமங்களுக்கு அளித்துள்ள கருத்துரிமையை நசுக்கும் எடுபிடிகளுக்கு விவசாயிகள் விரைவில் பாடம்புகட்டுவர் என திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

கிராமங்களின் கருத்துரிமையை நசுக்கும் எடுபிடிகளுக்கு விவசாயிகள் விரைவில் பாடம்புகட்டுவர் - உதயநிதி ஸ்டாலின்
கிராமங்களின் கருத்துரிமையை நசுக்கும் எடுபிடிகளுக்கு விவசாயிகள் விரைவில் பாடம்புகட்டுவர் - உதயநிதி ஸ்டாலின்

By

Published : Oct 2, 2020, 1:26 PM IST

காந்தி ஜெயந்தியை ஒட்டி இன்று(அக்.2) அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது.

கூட்டம் நடத்துவற்கான விதிமுறைகள், கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், விவாதிக்க வேண்டிய பொருள் குறித்த விவரங்களும் அரசாணையாக வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோவிட்-19 பரவலைக் காரணம் காட்டி தமிழ்நாடு அரசு திடீரென நேற்றிரவு மாநிலம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

கடந்த ஜனவரியில் நடைபெற்றதுபோல மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக தற்போதும் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதை தடுக்கவே அரசு தடை விதித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், "வேளாண் விரோத சட்டங்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அழைப்பை ஏற்று தமிழ்நாடு தீர்மானம் நிறைவேற்ற தயாரான நிலையில் கிராம சபை கூட்டங்களை ரத்து செய்வதாக அடிமை அரசு அறிவித்துள்ளது.

தொற்று பரவலை தடுக்க அல்ல, விவசாய சட்டத்தின் தீங்கு என்னவென்பது பரவக்கூடாது என்பதற்கே இந்த முடிவு.

இந்திய ஒன்றியத்தின் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கிராமங்களுக்கு அளித்துள்ள கருத்துரிமையை நசுக்கும் எடுபிடிகளுக்கு விவசாயிகள் விரைவில் பாடம் புகட்டுவர். திருமணத்தை நிறுத்த சீப்பை ஒளிக்கும் இந்த யுக்தி பலிக்காது. அக்கிரமமான விவசாய சட்டங்கள் தோல்வியுறுவது உறுதி" என கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details