கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (56).
இவர் தனது குடும்பத்தினருடன் மகள் திருமணம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது இவரின் வீட்டின் அருகில் இருந்த அர்ஜுனன் மகன்கள் சுந்தர்ராஜன்(36), ராமகிருஷ்ணன்(33), ஆகிய இருவரும் ராஜேந்திரனிடம் சென்று இரவு நேரத்தில் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறி மது போதையில் கேட்டுள்ளனர்.
தாக்குதல்
இதனால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுந்தர்ராஜன், ராமகிருஷ்ணன் இரும்பு கம்பியால் ராஜேந்திரனை தலையில் கடுமையாக தாக்கினர்.