தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலனின் தந்தையை குத்திக் கொலை செய்த பெண் வீட்டார்! - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: காதல் விவகாரத்தில் காதலனின் தந்தையை குத்திக் கொலை செய்த இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

trichy love motive murder
trichy love motive murder

By

Published : Sep 9, 2020, 8:54 PM IST

திருச்சி மாவட்டம் லால்குடி அய்யன் வாய்க்கால் கரை பகுதியை சேர்ந்தவர் கணேசன் என்கிற பார்த்திபன். (37). இவரது மகன் ஆகாஷ். (20). இவர் லால்குடி வளையல் கருவை தெருவைச் சேர்ந்த முக்காடு குமார் (40) என்பவரது மகள் தர்ஷினி (20) என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் தர்ஷினியின் தந்தை முக்காடு குமாருக்கு தெரியவந்தது. இதையடுத்து முத்துக்குமார், லால்குடி பெரிய தெருவை சேர்ந்த பாம்பு நாகராஜ் (32) ஆகியோர் இன்று (செப்.9) மாலை பார்த்திபன் வீட்டிற்கு வந்தனர்.

மகனை கண்டித்து வைக்குமாறு இருவரும் பார்த்திபனை எச்சரித்துள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து கத்தியால் பார்த்திபனை குத்த முயன்றனர்.

அவர்களிடமிருந்து இருந்து தப்பி சுண்ணாம்புகார தெருவை நோக்கி பார்த்திபன் ஓடினார். ஆனால் இருவரும் விரட்டிச் சென்று பார்த்திபனை கத்தியால் சரமாரியாக குத்தினர்.

இதில் படுகாயமடைந்த பார்த்திபனை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பார்த்திபன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலறிந்த லால்குடி காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பாம்பு நாகராஜன், முக்காடு குமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details