திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் இறந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, மேலும் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு ஈமக்கிரியை செய்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
திருச்சி காவிரி ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிப்பு! - திருச்சி ஆட்சியர் சிவராசு
திருச்சி: கரோனா பரவல் காரணமாக மகாளய அமாவாசை அன்று திருச்சி அம்மா மண்டபம் காவிரி ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் இங்கு கூடுவார்கள். அன்றைய தினம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் நீராடுவார்கள். தற்போது கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதும், அன்றாடம் நடைபெறும் காரியங்கள் மட்டுமே அம்மா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. நாளை (செப்.17ஆம் தேதி) மகாளய அமாவாசை தினமாகும்.
அன்றைய தினம் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். இதனால் கரோனா பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக மகாளய அமாவாசை தினத்தன்று அம்மா மண்டபம் மட்டுமின்றி, அதைச்சுற்றி உள்ள காவிரி ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுக்கத் தடை விதித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, காவல் துறை ஆணையர் லோகநாதன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.