தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கின ! - Training classes started at Anna Management Center

சென்னை : அண்ணா மேலாண்மை நிலையத்தில் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளை கூடுதல் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தொடங்கிவைத்தார்.

அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கின !
அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கின !

By

Published : Oct 7, 2020, 10:31 PM IST

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அரசு அலுவலர்கள் பயிற்சி நிலையத்தின் சார்பில் வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கான 19 நாள் அடிப்படை பயிற்சியும், பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களுக்கான ஒருநாள் நிர்வாகப் பயிற்சியும் இன்று தொடங்கியது.

இப்பயிற்சியினை கூடுதல் தலைமைச் செயலாளரும் பயிற்சித் துறை தலைவருமான வெ.இறையன்பு இன்று தொடங்கி வைத்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் இன்று மீண்டும் தொடங்கியது

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, உரிய சமூக இடைவெளி விடுதல், முகக்கவசம் அணிதல் ஆகிய முன்னெச்சரிக்கை பாதுகாப்புகளுடன் தெர்மல் ஸ்கேனர், பள்ஸ் ஆக்சி மீட்டர் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பயிற்சியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குநர் எஸ்.ராஜேந்திரன், நிகழ்ச்சி இயக்குநர் எஸ்.பழனி, நிகழ்ச்சி மேலாளர் மு.சுந்தரராஜன் இணைஇயக்குநர் சின்னுசாமி அண்ணா மேலாண்மை நிலைய நிர்வாக அலுவலர் எம்.ஆர்.யுகேந்திரன், சட்டப் பேராசிரியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விரு பயிற்சிகளிலும், சுமார் 50 அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details