தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் - விவசாயிகள் அறிவிப்பு! - TN Farmers against New farm laws

திருச்சி : வேளாண் சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி, தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று, தமிழக ஏரி மற்றும் ஆற்று நீர்ப் பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நவ.20ஆம் தேதி தலைமை செயலகம் முற்றுகையிடுவோம் - விவசாயிகள் அறிவிப்பு
நவ.20ஆம் தேதி தலைமை செயலகம் முற்றுகையிடுவோம் - விவசாயிகள் அறிவிப்பு

By

Published : Nov 5, 2020, 5:50 PM IST

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று(நவ.5) திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்நாதன் தலைமைத் தாங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர்,"மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. இதனை தமிழ்நாடு அரசு அமல்படுத்தக்கூடாது. எனவே இதைக் கண்டித்து வரும் 20ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால் மழை நீரை வீணடிக்காமல் ஏரிகளிலும், அணைகளிலும் சேமிக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். வேளாண் துறை தோட்டக்கலைதுறை, தொழில் துறை இவைகளில் எந்த திட்டமும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்படுவதால் உற்பத்தி செய்த நெல் மழையினால் வீணாகிறது. எனவே, இதற்கு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும். காவிரி - புதுகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின் இணைப்பு கால தாமதமின்றி வழங்க வேண்டும். குடிமராமத்து பணிகள், நீர்வள நிலவள மேம்பாட்டு திட்ட பணிகள் போன்றவை மழைக்காலத்தில் மேற்கொள்வதை நிறுத்த வேண்டும்" என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details