தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ. 2,000 கோடி மதிப்பு பங்குகள் வடிவில் பிணையப் பத்திரங்களை ஏலம் விட முடிவு - பத்திரங்களை ஏலம் விட தமிழ்நாடு அரசு முடிவு

சென்னை: தமிழ்நாடு அரசு மொத்தம் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வடிவிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

Tn finance department statement
Tn finance department

By

Published : Jun 6, 2020, 5:11 PM IST

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு மொத்தம் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், பத்து ஆண்டுக்காலங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் முப்பது ஆண்டுக்காலங்களுக்கு ரூபாய் ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவுள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள கோட்டை அலுவலகத்தில் ஜூன் 09, 2020 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் Reserve Bank of India Core Banking Solution(E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஜூன் 09, 2020 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details